close
The Wayback Machine - https://web.archive.org/web/20130108082514/http://dinamani.com:80/tamilnadu/article1408342.ece

தாராபுரம் தொழிலதிபரிடம் சிக்கியது அமெரிக்க கடன் பத்திரங்கள் அல்ல: வருமான வரித் துறை

First Published : 05 January 2013 02:57 AM IST

close

தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்டது அமெரிக்க கடன் பத்திரங்கள் இல்லை, பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கம் என்பவர் வீட்டில் இருந்து ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அவர் ஆஜரானார். அவருடன் அவரது வழக்குரைஞர் இளங்கோவும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

காலை 11.45 மணி முதல் இரவு வரை ராமலிங்கத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது வழக்குரைஞர் இளங்கோ விசாரணை நடந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. விசாரணை முடிவில், அவை கடன் பத்திரங்கள் இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.

விசாரணை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் கூறியது: ராமலிங்கம் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை அமெரிக்க கடன் பத்திரங்கள் இல்லை.

அவை பண பரிவர்த்தனை பத்திரங்கள்தான். இந்த பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

அவரிடம் இருந்து 5 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பத்திரத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலர் ஆகும்.

இந்த பரிவர்த்தனை பத்திரங்களை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கியதாகவும், இவை தங்கப் பத்திரங்களுக்கு மாற்றாக பெறப்பட்டது என்றும் ராமலிங்கம் கூறுகிறார். விசாரணையில் ராமலிங்கம் பல்வேறு கோணங்களில் பதில் அளிக்கிறார். அமெரிக்காவில் இருந்து எந்தவித தகவலும் வருமான வரித்துறைக்கு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்காவிலிருந்து உறுதியான தகவல் கிடைத்துவிடும்.

இந்த பத்திரங்கள் 2011 பிப்ரவரி 25-ம் தேதி வழங்கப்பட்டுள்ளன. இதன் முதிர்வு காலம் 2015 பிப்ரவரி ஆகும்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு ராமலிங்கம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரியை அவர் செலுத்தவில்லை. ராமலிங்கத்தின் வங்கி லாக்கரில் இருந்து சில நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்) ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கு ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலை வியாபாரியின் வீட்டில் ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள் இருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(6)

அது ஒரு சாதாரண அமெரிக்க பத்திரத்தின் விளையாட்டு பத்திரம்;;;அதை வைத்து ஏதோ குழந்தை விளயாடியிருப்பது இவர் கையில் தவறாக வந்தது என்பதே உண்மை;;ஐவரும் அதை உண்மை பத்திரம் என்று எண்ணி வங்கியில் டெபொசிட் செய்ய போனது தவறு தான்;;;;இதற்கு என்ன செய்வது ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான அன்று இந்த பணம் ;;;இதில் ஏதோ தொடர்பா ?ராமலிங்கம் போன்ற சாதாரண மனிதனிடம் இவ்வளவ் தொகை எப்படி ?யார் பணத்துக்கு இவர் பினாமி ? ஒன்றுமே புரியலை ''ஆனால் இந்த கேஸ் விரைவில் பிஸ் வானம் ஆகும்;;;அது உண்மை

உண்மையின் விலை மிகவும் குறைவு இந்த ஜனநாயக நாட்டில் அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறா இல்லை அதை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் தவறா

அம்பேத்கர் எழுதும்போது நேரு காந்தி போன்ற நேர்மையான தலைவர்கள் இருந்தார்கள். வரும் காலத்தில் இப்போது நாட்டை கொள்ளை அடிக்கும் நேர்மை அற்ற ஊழல்வாதிகளிடம் நாடு சிக்கி சின்னாபின்னாமாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இது அனேகமாக 2ஜீ பணமாக இருக்கலாம் .தாராபுரம் வுளவு துறையை முதல்வர் வுடனே மாற்ற வேண்டும் 2ஜீ சாதிக் பாட்சா போல நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும்

தொழில் அதிபர்கள் /முனைவோர்களுக்கு இதில் பாடம் உள்ளது . மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க கூடாது .ஆனாலும் கணக்கிடப்பட்ட துணிச்சல் செயல் வேண்டும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.