close
The Wayback Machine - https://web.archive.org/web/20121208082043/http://dinamani.com:80/education/education_articles/article1323004.ece

புற்றுநோய் முற்றியவர்களுக்கு வலியை குறைக்கும் படிப்பு

First Published : 01 November 2012 03:17 PM IST

close

புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் நோய் முற்றிய இறுதிக் கட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியை குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative Care எனப்படும் இந்த துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஒரு நோயாளியினுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமானதும் வேதனை மிகுந்தததுமான கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு துடைக்க உதவும் உன்னதமான பணி இது. இச்சேவையின் மூலம், நோயாளிக்கு மனதளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.

இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சாவாலான விஷயம் தான். இத்துறையானது இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.

The Indian Association of Palliative Care (IAPC) என்ற அமைப்பானது கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இத்துறையில் கல்வி செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

வழங்கப்படும் படிப்புகள்:

IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள் Palliative Care தொடர்பான பல அடிப்படை படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன. இந்தப்படிப்பு 2 வகைப்படும். முதல் பாகமானது 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative Care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.

இரண்டாம் பாகமானது விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative Care படிப்பில் Communication skills. Psychological Issues. Ethical and Spiritual Issues. Pain Management. Symptom management. Bereaement Counselling, Palliative Care emergencies. End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Institute of Palliative Medicine (AIIMS), Delhi

Institute of Palliative Medicine (Calicut)

TMCH (Mumbai), Bangalore Baptist Hospital. IPC (Thrissur)

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.