காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வு மையங்கள் வெளியீடு
By dn, மதுரை
First Published : 18 December 2012 11:44 AM IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இளநிலையில் பி.எஸ்சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ), பிபிஇ, பிபிஏ, பிபிஏ.,(ரீடைல்), பிபிஏ.,(சிஏ), பி.எஸ்சி.,(டூரிசம் அன்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட், பி.டி.எச்.எம் ஆகிய படிப்புகளுக்கு நாளை முதல் டிச.,31ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
முதுகலையில் எம்.,ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.காம்.,(கோ-ஆப்ரேடிவ்), எம்.சி.ஐ., எம்.பி.எம்., எம்.காம்.,(பேங்கிங்), எம்.எல்.எம், எம்.டி.எம்., ஆகிய படிப்புகளுக்கு டிச.,26 முதல் ஜன.,05ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு டிச.,26 முதல் ஜன.,5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பி.எட்., எம்.பில் படிப்புகளுக்கு டிச.,12ம் தேதி முதல் டிச.,31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றது.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வு நடைபெறும் மையங்களில் பெற்று கொள்ளலாம். தேர்வு காலை 10 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் தேர்வுகள் நடக்கவுள்ளது.
மாணவர்கள் தேர்வெழுதும் மையம் பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- வறட்டு கவுரவம் பார்க்காமல் உழவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ்
- நிப்டி இரண்டு வருட உச்சமாக 6100 புள்ளிகள் தொட்டது
- பண்ருட்டி அம்மன் கோவிலில் விநாயகர் சிலை உடைப்பு: போலீசார் விசாரணை
- ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி
- இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பிகாரில் கைது
- சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி



கருத்தை பதிவு செய்க